Friday, October 9, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவின் துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களில் பாரிய இடைவெளிகள்!

கனடாவின் துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களில் பாரிய இடைவெளிகள்!

கனடாவின் துப்பாக்கிக் கட்டுப்பாடு சட்டங்களில் உள்ள தீவிர இடைவெளிகளை அமெரிக்காவின் எப்.பி.ஐ புலனாய்வு பிரிவு அம்பலப்படுத்தியுள்ளதாகக் கனடியத் துப்பாக்கிக் கட்டுப்பாடு அமைப்பான ‘பாலிசெசூவியன்ட்’ தெரிவித்துள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள டம்பிளர் ரிட்ஜ் பகுதியில் இடம்பெற்ற கொடூரத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் அமெரிக்காவின் எப்.பி.ஐ தாக்கல் செய்துள்ள நீதிமன்ற ஆவணங்களில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இக்கொலைச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் ராணுவ பாணி ‘SKS’ ரக அரை-தானியங்கி துப்பாக்கிகளை உடனடியாகத் தடை செய்யுமாறு பிரதமர் மார்க் கார்னியின் அரசாங்கத்தை அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. SKS துப்பாக்கிகள் கனடாவில் இன்னும் சட்டபூர்வமாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிக ஆபத்தான இத்தகைய ஆயுதங்கள் சாதாரண பொதுமக்களின் கைகளில் இருப்பதற்கு எவ்வித நியாயமும் இல்லை. கார்னி அரசாங்கம் இனிமேலும் இந்த ஆயுதம் குறித்து அலட்சியமாக இருக்க முடியாது என பாலிசெசூவியன்ட் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் தாய், தம்பி, 5 மாணவர்கள் மற்றும் ஒரு கல்வி உதவியாளர் உட்பட 8 பேரைக் சுட்டுக் கொன்ற 18 வயதான ஜெஸ்ஸி வான் ரூட்சலேர் என்பவருக்குத் திட்டமிடல் மற்றும் ஆதரவு அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் பிரையன்ட் என்பவருக்கு எதிரான வழக்கில் எப்.பி.ஐ இந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments