Wednesday, March 11, 2026
spot_img
Homeபொது செய்திகள்உத்தர பிரதேசத்தில் தம்பதி வெட்டிக்கொலை

உத்தர பிரதேசத்தில் தம்பதி வெட்டிக்கொலை

உத்தர பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் உள்ள மசூம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஷியாம் லால் சவுராசியா (55). அவருடைய மனைவி பாஸ்மதி சவுராசியா (50). இவர்கள் இருவரும் அப்பகுதியில் பயிற்சி மையத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தம்பதியின் உடல் தங்கள் வீட்டிற்கு வெளியே கிடப்பதாக உள்ளூர்வாசிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது இருவரின் உடலையும் கண்ட போலீசார் இவர்கள் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டதைக் கண்டறிந்தனர். பின்னர் இறந்தவர்களின் உடலை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தம்பதியை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments