Sunday, September 27, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்'புருஷன்' படப்பிடிப்பில் விபத்து: நடிகர் விஷால் பலத்த காயம்

‘புருஷன்’ படப்பிடிப்பில் விபத்து: நடிகர் விஷால் பலத்த காயம்

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விஷால், கோவாவில் இடம்பெற்றுவரும் தனது புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது சண்டைக்காட்சியில் நடித்த நிலையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் ‘புருஷன்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது கோவாவில் இடம்பெற்று வருகிறது.

இதன்போது முக்கியமான சண்டைக்காட்சியில் டூப் கலைஞர் இன்றி விஷால் நடித்ததாகவும், எதிர்பாராத விதமாக அவருக்கு முதுகுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், காயம் குணமடையும் வரை குறைந்தது மூன்று வாரங்கள் முழுமையான ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முக்கிய பொதுக்குழு மற்றும் ஆண்டறிக்கை கூட்டத்தில் விஷால் நேரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள விஷால், இதுவரை பல ஆபத்தான சண்டைக்காட்சிகளில் நடித்திருந்தாலும், இந்தச் சம்பவம் எதிர்பாராத விபத்து என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உடல்நிலை காரணமாக கூட்டத்தில் நேரில் கலந்துகொள்ள முடியாதது வருத்தமளிப்பதாகவும், எனினும் தனது எண்ணங்களும் கவனமும் கூட்டத்தின் நடவடிக்கைகளுடனும் உறுப்பினர்களுடனும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

விஷால் விரைவில் குணமடைந்து மீண்டும் படப்பிடிப்பில் இணைய வேண்டும் என ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments