ஜப்பானில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 15 வீரர்கள் கொண்ட அணிக்கு சஹான் ஆராச்சிகே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அணியில் அஷேன் பண்டார, லசித் குரூஸ்புள்ளே, கேஷான் டி லிவேரா, நிரோஷன் டிக்வெல்லா, பினுர பெர்னாண்டோ, நுவனிது பெர்னாண்டோ, தரிந்து ஹன்சக, துஷான் ஹேமந்த, சினெத் ஜயவர்தன, சாமிக்க கருணாரத்ன, பிரமோத் மதுஷான், வனுஜ சஹான், நுவன் துஷார மற்றும் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆடவர் கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 3 வரை நடைபெறவுள்ளன. இலங்கை நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இலங்கை அணி செப்டம்பர் 29ஆம் திகதி ‘A’ குழுவின் வெற்றியாளரை எதிர்கொள்ளும்.
பெண்கள் அணிக்கு சாமரி அத்தபத்து தலைமையிலான 15 பேர் கொண்ட அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


