Saturday, March 14, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்ஒரே நாடு, ஒரே மொழியைக் கொண்டுவர முயற்சி - ராகுல் காந்தி

ஒரே நாடு, ஒரே மொழியைக் கொண்டுவர முயற்சி – ராகுல் காந்தி

இந்த ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-

ஒரே நாடு, ஒரே மொழி முறையைக்கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. பல மொழிகள் ஒன்றைணைந்ததுதான் இந்தியா. நாட்டின் பாரம்பரியம், கலாசாரம், வரலாற்றை மாற்ற ஆர்எஸ்எஸ் முயற்சித்து வருகிறது என நான் கூறி வருகிறேன். வரலாறுகள், கலாசாரங்கள் மற்றும் மரபுகளை ஒழிப்பதே ஆர்.எஸ்.எஸ்-இன் நோக்கம்.

அதற்கு துவக்கப்புள்ளி இதுதான். தங்களின் ஒரே வரலாறு ஒரே பாரம்பரியம் ஒரே மொழி என்ற ஒரே கொள்கையை கொள்கையை அமல்படுத்த விரும்புவதால் தான் அரசியல் சாசனம் மீது தாக்குதல் நடத்துகின்றனர். பல்வேறு மாநிலங்களில் தங்களது கல்வி முறையை கொண்டு வருவதற்கான மற்றுமொரு முயற்சியே இது. அந்த அமைப்பால் நமது அரசியலமைப்பு, மாநிலங்கள் கலாசாரங்கள், பாரம்பரியங்கள் மற்றும் வரலாற்றை மாற்ற முடியாது என அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு போராட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments