Tuesday, September 8, 2026
spot_img
Homeஉலக செய்திகள்திபெத்தில் வேகமாக உருகும் பனிப்பாறைகள்! சீனா எச்சரிக்கை

திபெத்தில் வேகமாக உருகும் பனிப்பாறைகள்! சீனா எச்சரிக்கை

திபெத்தில் வேகமாக மறையும் பனிப்பாறைகள், பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வெள்ளப்பெருக்குகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

சீன – நேபாள எல்லைப் பகுதியில் ஆகஸ்ட் 26ஆம் திகதி ஏற்பட்ட கடுமையான பனிப்பாறை சரிவுக்கு புவி வெப்பமயமாதலே முக்கிய காரணமாக இருக்கலாம் என சீன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளப்பெருக்குகள் ஏற்படும் அபாயம்

திபெத் பீடபூமியில் கடந்த 60 ஆண்டுகளில் பனிப்பாறைகளின் பரப்பளவு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.

இதன்படி, அப்பகுதியில் பனிப்பாறைகளின் பரப்பளவு சுமார் 51,000 சதுர கிலோமீற்றரிலிருந்து 39,000 சதுர கிலோமீற்றராகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

. மேலும், பனிப்பாறைகள் உருகுவதன் காரணமாக அப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏரிகள் உருவாகியுள்ளதாகவும், இதனால் திடீர் மற்றும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வெள்ளப்பெருக்குகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

காலநிலை மாற்றத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பனிப்பாறைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நீர்நிலைகளில் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம் என ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments