Tuesday, September 8, 2026
spot_img
Homeபொது செய்திகள்தல,தளபதி சந்திப்பு?

தல,தளபதி சந்திப்பு?

தமிழக முதலமைச்சர் விஜய்யும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்குமாரும் லண்டனில் சந்திக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதலமைச்சர் விஜய் செப்டெம்பர் 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை லண்டனுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது தொழில் முதலீடுகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் அவர் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, செப்டெம்பர் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் லண்டனிலுள்ள சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெறவுள்ள ‘Michelin Le Mans Cup 2026’ கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கக்கூடும் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

இருவரும் சந்தித்தால், தமிழக அரசியல் மற்றும் தமிழ் சினிமா வட்டாரத்தில் இது பெரும் பேசுபொருளாக அமையக்கூடும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர்.

எனினும், விஜய் தரப்பிலிருந்தோ அல்லது அஜித்குமார் தரப்பிலிருந்தோ இதுவரை இந்த சந்திப்பு தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments