Tuesday, September 8, 2026
spot_img
Homeஉலக செய்திகள்நேபாள பெருவெள்ளம் - தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு

நேபாள பெருவெள்ளம் – தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு

நேபாள பெருவெள்ளத்தின் 13ஆவது நாளான நேற்று (07) தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டு, உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,356 ஆக அதிகரித்துள்ளதுடன், சுமார் 5,000 பேர் தொடர்ந்து காணாமல்போயுள்ளனர்.

இதுவரை 13,396 பேர் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காணாமல்போனவர்களைத் தேடும் பணியில் 20,000க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்வதுடன், உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments