Tuesday, September 8, 2026
spot_img
Homeபொது செய்திகள்கணக்கு இல்லாமலே WhatsApp அழைப்பு!

கணக்கு இல்லாமலே WhatsApp அழைப்பு!

உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியான , பயனர்களின் வசதியை அதிகரிக்கும் வகையில் புதிய ‘Guest Calling’ அம்சத்தை அறிமுகப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டால், WhatsApp கணக்கு இல்லாதவர்களும் செயலியை பதிவிறக்கம் செய்யாமல் அல்லது புதிய கணக்கை உருவாக்காமல், இணைய உலாவி (Web Browser) ஊடாக WhatsApp அழைப்புகளில் இணைய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, WhatsApp பயனர் ஒருவர் அழைப்புக்கான இணைப்பை உருவாக்கி, அதனை மற்றவர்களுடன் பகிர முடியும். அந்த இணைப்பை பயன்படுத்தி WhatsApp கணக்கு இல்லாதவர்களும் அழைப்பில் விருந்தினராக இணையக்கூடிய வகையில் இந்த வசதி உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த அம்சம் தொடர்பான தகவல்களை WhatsApp புதிய அம்சங்களை கண்காணிக்கும் WABetaInfo வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், ‘Guest Calling’ வசதி எப்போது அனைத்து பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்பது தொடர்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments