கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் வெப்பமான காலநிலை குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று பகல் வேளையில் குறித்த மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடல் உணரும் வெப்பநிலை அதாவது வெப்பச் சுட்டெண் (Heat Index) ‘எச்சரிக்கை நிலைக்கு’ (Caution Level) உயர்வடையும் சாத்தியமுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
சூரிய ஒளியில் நீண்ட நேரம் வெளிப்படுவதும் திறந்தவெளியில் செயற்படுவதும் சோர்வை ஏற்படுத்தும் என்றும், தொடர்ந்து செயற்பட்டால் தசைப்பிடிப்பு ஏற்படக்கூடும் என்றும் திணைக்களம் பொதுமக்கள் எச்சரித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்களை நீரேற்றமாகப் பாதுகாத்துக்கொள்ளுமாறும், கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளுமாறும் கேட்டுள்ளது.


