Wednesday, August 26, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் 17 வயது சிறுமி உயிரிழப்பு

புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் 17 வயது சிறுமி உயிரிழப்பு

கிளிநொச்சி – யாழ் பல்கலைக்கழக வீதியில் உள்ள புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 17 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று புதன்கிழமை முற்பகல் 11 30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த புகையிரதத்தில் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட கார் மோதியுள்ளது.

விபத்துக்குள்ளான காரில் பயணித்த, கிளிநொச்சி-செல்வா நகர் பகுதியைச் சேர்ந்த தினேஸ்குமார் டிலானி (வயது 17) என்ற சிறுமி, சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments