Wednesday, August 5, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சஷீந்திர ராஜபக்ஷவின் வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு!

சஷீந்திர ராஜபக்ஷவின் வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் ராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணைக்காக செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இந்த வழக்கு அழைக்கப்பட்ட போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

 

இதன்பின்னரே, முன்வைக்கப்பட்ட கருத்தைக் கருத்தில் கொண்ட நீதிபதி, வழக்கை விசாரணைக்காக செப்டம்பர் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments