Sunday, July 26, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ஜனாதிபதி மாளிகையில் வெளிநபர்கள் தங்கியுள்ளனரா? ஜனாதிபதி ஊடகப் பிரிவு விளக்கம்

ஜனாதிபதி மாளிகையில் வெளிநபர்கள் தங்கியுள்ளனரா? ஜனாதிபதி ஊடகப் பிரிவு விளக்கம்

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விளக்கமளித்துள்ளது.

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன்இ அது முற்றிலும் பொய்யான செய்தியாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டில்இ நாடு முழுவதிலும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் பல்வேறு நபர்கள் 3இ089 பேர் தங்கியிருந்தனர்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானதாகும். 2025 ஆம் ஆண்டில் ஜனாதிபதி மாளிகை வளாகங்களில் உள்ள ஏனைய கட்டிடங்களில்இ பாதுகாப்புப் பிரிவினர்இ
ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் தமது உத்தியோகபூர்வ தேவைகளுக்காகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்கியிருந்துள்ளனர்.

இருப்பினும்இ இந்த அதிகாரிகளில் எவரும் ஜனாதிபதி மாளிகைகளை தங்குவதற்காக பயன்படுத்தவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments