Thursday, July 23, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சஜித் தலைமையில் எதிர்க்கட்சிகள் அவசர கூட்டம்

சஜித் தலைமையில் எதிர்க்கட்சிகள் அவசர கூட்டம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்ட அவசர கூட்டம் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

நீதித்துறை தொடர்பான விடயங்கள் குறித்து நாடாளுமன்ற விவாதம் நடத்தச் சந்தர்ப்பம் வழங்காமை ஜனநாயக ஆட்சிக் கோட்பாடுகளைப் பாதிக்கும் செயலாகும் எனக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இது தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நாடாளுமன்ற மற்றும் அரசியல் ரீதியான நடவடிக்கைகள் குறித்து உறுப்பினர்களுடன் விரிவாகக் கலந்துரையாடினார்.

இந்த அவசரக் கூட்டத்தில் ரோஹினி விஜேரத்ன, சித்ரால் பெர்னாண்டோ, வி. இராதாகிருஷ்ணன், சமிந்த விஜேசிறி, கயந்த கருணாதிலக, ஜே. சி. அலவத்துவல, சுஜித் சஞ்சய பெரேரா, காவிந்த ஜயவர்தன, சதுர கலப்பத்தி, கபீர் ஹாஷீம், ரவி கருணாநாயக்க, எம். எஸ். ஏ. வாசித், ரோஹண பண்டார, டபிள்யூ. எச். எம். தர்மசேன, பி. ஆரியவங்ச, தயாசிறி ஜயசேகர, அனுராத ஜயரத்ன, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, ரிஷாத் பதியுதீன், ரவூப் ஹகீம், இராமநாதன் அர்ச்சுனா, நிசாம் காரியப்பர், எம். எஸ். உதுமாலெப்பே, சானக மதுகொட, சுரங்க ரத்நாயக்க மற்றும் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments