Friday, March 13, 2026
spot_img
Homeஉலக செய்திகள்அமெரிக்காவில் பயணிகள் விமானம், ஹெலிகாப்டர் மோதி 18 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் பயணிகள் விமானம், ஹெலிகாப்டர் மோதி 18 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மோதிய விபத்தில், 18 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. அமெரிக்காவில் கான்சாஸிலிருந்து புறப்பட்ட ஏர்லைன்ஸ் விமானம், வாஷிங்டன் ரீகன் தேசிய விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. ரீகன் விமான நிலையத்தில் தரையிறங்க போடோமாக் நதியின் மேல் தாழ்வாக விமானம் பறந்து கொண்டு இருந்தது. அப்போது பயணிகள் விமானமும், ராணுவ ஹெலிகாப்டரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பயணிகள் விமானம் ஆற்றில் விழுந்து நொறுங்கியது. விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. பயணிகள் விமானத்தில் 64 பேரும், ராணுவ ஹெலிகாப்டரில் மூன்று பேரும் பயணித்திருந்தனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. அமெரிக்க பாதுகாப்பு படை மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவ குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 18 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தை தொடர்ந்து ரீகன் தேசிய விமான நிலையம் மூடப்பட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் நடுவானில் பிளாக் ஹாக் எனப்படும் ராணுவ ஹெலிகாப்டர் மீது அமெரிக்கன் ஏர்லைன்சின் பயணிகள் விமானம் ஒன்று பயங்கரமாக மோதியது. ரோனால்ட் ரீகன் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் மீது விமானம் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்துக்குள்ளான விமானத்தில் 64 பேரும், ஹெலிகாப்டரில் 3 ராணுவ வீரர்களும் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. விமானம் மற்றும் ஹெலிகாப்டர் இரண்டும் போடோமாக் என்ற ஆற்றில் விழுந்தநிலையில் தற்போது மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனாலும் உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அங்குள்ள ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளன. இந்நிலையில் விபத்து நிகழ்ந்தது எப்படி? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments