நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 07 சிறைச்சாலை அதிகாரிகள், 20 கைதிகள் உட்பட 27 ஆக உயர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


