Wednesday, March 11, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்கிஷன் தாஸ் நடித்துள்ள 'தருணம்' படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு

கிஷன் தாஸ் நடித்துள்ள ‘தருணம்’ படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு

தேஜாவு’ படத்தின் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தருணம்’. கிஷன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார். ஜென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் தயாரிக்கும் இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் பால சரவணன், ராஜ் அய்யப்பன், கீதா கைலாசம், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜா பட்டார்ஜி ஒளிப்பதிவாளராகவும், அருள் சித்தார்த் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ள இப்படத்திற்க்கு தர்புகா சிவா பாடல்களுக்கான இசையும், அஸ்வின் ஹேமந்த் பிண்ணனி இசையும் மேற்கொண்டுள்ளனர். இப்படம் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் ஒரு சில காரணத்தால் படம் பொங்கல் பண்டிகையில் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் புதிய வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இப்படம் வருகிற 31-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது குறித்த பதிவை இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் வெளியிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments