தென்கொரியாவின் முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் தென்கொரியத் தூதுவருமான ஜொங்-மூன் சோய், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கொழும்பிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின் போது, ஆசிய நாடுகளுக்கு இடையிலான கூட்டாண்மையின் முக்கியத்துவம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இருதரப்பிலும் விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


