Friday, June 26, 2026
spot_img
Homeஉலக செய்திகள்அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் கோலாகலமாக ஆரம்பம்!

அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் கோலாகலமாக ஆரம்பம்!

அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை முன்பாக நடைபெற்ற பிரமாண்ட நிகழ்வில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விழாவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், வெள்ளை மாளிகைக்கு முன்பாக அமைந்துள்ள தேசியப் பூங்காவில் 16 நாட்கள் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அரசு திருவிழாவும் இதனுடன் ஆரம்பமாகியுள்ளது.

ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ட்ரம்ப், “நாம் நமது 250ஆவது சுதந்திர ஆண்டின் விளிம்பில் நிற்கிறோம்.

அமெரிக்கா மீண்டும் கம்பீரமாக மீண்டெழுந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அமெரிக்கப் போர் விமானங்களின் வான் சாகசங்கள், இராணுவ இசைக்குழுக்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பிரபல நாட்டுப்புறப் பாடகர் லீ கிரீன்வுட்டின் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments