2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்கொட்லாந்து அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரேசில் வெற்றி பெற்றது.
மியாமி விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கு நடைபெற்ற ‘சி’ பிரிவு லீக் ஆட்டத்தில் பிரேசில் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் விளையாடின.
போட்டியின் 7-வது நிமிடத்தில் பிரேசில் அணிக்காக, வினிசியஸ் ஜூனியர் முதல் கோலை அடித்தார். 1-0 புள்ளி கணக்கில் அந்த அணி முன்னிலையில் இருந்தது.
2-வது பாதியின் 3-வது நிமிடத்தில் பிரேசிலின் (48) வினிசியஸ் ஜூனியர் மற்றொரு கோலை அடித்தார்.
தொடர்ந்து 60-வது நிமிடத்தில் பிரேசிலின் மேத்யூஸ் குன்ஹா 3-வது கோலை போட்டார்.
அதன்பின்பு கோல்கள் அடிக்கப்படவில்லை. இதனால், உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்கொட்லாந்து அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரேசில் வெற்றி பெற்றது.


