முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
‘ஹரக் கட்டா’ எனப்படும் நதுன் சிந்தகவை பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழான தடுப்புக்காவல் உத்தரவிலிருந்து விடுவித்து, வேறு சிறைச்சாலைக்கு மாற்றி, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கி அவரை சாதாரண கைதியாக தடுத்து வைப்பதற்காக 1,200 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


