Wednesday, March 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மஹியங்கனை - கண்டி வீதியில் லொறி விபத்து - ஒருவர் உயிரிழப்பு!

மஹியங்கனை – கண்டி வீதியில் லொறி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

ஹசலக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹியங்கனை – கண்டி வீதியில் உள்ள உடுதஹ பகுதியில் கண்டியில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த லொறியொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து நேற்று சனிக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 46 வயதுடைய அக்குறணை பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

இவ்விபத்தில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் படுகாயமடைந்துள்ளதுடன் உதவியாளர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மஹியங்கனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹசலக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments