இந்திய கடற்படைக் கப்பலான ‘INS AIRAVAT ’ 2026 ஜூன் 01 காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தீவை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் அக் கப்பலை கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.
இவ்வாறு தீவை வந்தடைந்த Landing Ship Tank வகைக்குரிய ‘INS AIRAVAT என்ற கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் IP Patil கடமையாற்றுகின்றார்.
மேலும், கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ள இந்தியக் கடற்படைக் கப்பலான ‘INS AIRAVAT’ தீவில் தங்கியிருக்கும் காலத்தில், அதன் குழுவினர் இலங்கைக் கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், தீவின் பல பகுதிகளுக்குச் சென்று முக்கிய இடங்களைப் பார்வையிடவும் திட்டமிட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.


இதேநேரம், நல்லெண்ண வருகைக்காகவும், விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் 2026 மே 01 அன்று தீவிற்கு வந்தடைந்த பாகிஸ்தான் கடற்படையின் இரண்டு (02) கப்பல்களான ‘PNS Taimur’, ‘PNS Aslat’ மற்றும் நீர்மூழ்கிக் கப்பலான ‘PNS Hangor’ ஆகியவற்றை இலங்கை கடற்படையினர் பாரம்பரிய முறையின் படி கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.
கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ள ‘PNS Taimur’ கப்பலின் கட்டளை அதிகாரியாக கேப்டன் Niamat Saeed Khan, ‘PNS Aslat’ கப்பலின் கட்டளை அதிகாரியாக கேப்டன் Nadir Mateen Afridi, மற்றும் ‘PNS Hangor’ நீர்மூழ்கிக் கப்பலின் கட்டளை அதிகாரியாக கேப்டன் Uzair Farooq ஆகியோர் கடமையாற்றுகின்றனர்.
மேலும், கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களின் குழுவினர், முக்கியமான இடங்களைப் பார்வையிடுவதற்காகத் தீவின் பல பகுதிகளுக்குச் செல்லவும், இலங்கை கடற்படைக் கப்பல்களுடன் மேற்கு கடற்படைக் கட்டளையகத்தின் கடற்பரப்பில் PASSEX என்ற கடற்படைப் பயிற்சியில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.