Saturday, June 6, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இலங்கை வெற்றி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இலங்கை வெற்றி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

ஜமைக்கா- கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் இந்தப் போட்டி நேற்று (03) நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் தலைவர் ஷேய் ஹொப் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

இப்போட்டிக்கான இலங்கை குழாம் புதிய தலைவர் குசல் மெண்டிஸ் மூலம் வழிநடாத்தப்பட்டிருந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 303 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக பெதும் நிஸ்ஸங்க அதிகபட்சமாக 79 ஓட்டங்களைப் பெற்றார்.

304 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 49.2 ஓவர்களில் 262 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

அந்த அணி சார்பில் அதிகபட்சமாக அணித்தலைவர் ஷாய் ஹோப் 56 ஓட்டங்களையும் ஜஸ்டின் கிரீவ்ஸ் 45 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் துஷ்மந்த சமீர 10 ஓவர்கள் பந்துவீசி 67 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

ஆட்டநாயகன் விருது குசல் மெண்டிஸிற்கு வழங்கப்பட்டது.

அடுத்த போட்டி ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெறவுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments