Sunday, June 7, 2026
spot_img
Homeஉலக செய்திகள்அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச் சூடு!

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச் சூடு!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் ஒருவரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

 

நேற்று (23) பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

வெள்ளை மாளிகையின் பிரதான பாதுகாப்பு வலயத்திற்கு அருகிலுள்ள வீதியொன்றில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, உடனடியாகச் செயற்பட்ட இரகசிய உளவுத்துறை மற்றும் பொலிஸ் குழுக்கள் அப்பகுதியை முற்றுகையிட்டன.

 

இச்சம்பவத்தைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையைச் சுற்றியுள்ள வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டதுடன், வளாகத்தின் பாதுகாப்பை உச்சகட்டமாக பலப்படுத்துவதற்கு பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

இந்த துப்பாக்கிச் சமரின் போது அருகில் இருந்த மேலும் ஒரு நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பாதுகாப்புப் படை அதிகாரிகள் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

 

இச்சம்பவம் இடம்பெற்ற வேளையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகைக்குள் இருந்ததாக சர்வதேச ஊடக அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments