Saturday, March 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்லாஃப்ஸ் கேஸ் விலை உயர்வு!

லாஃப்ஸ் கேஸ் விலை உயர்வு!

லாஃப்ஸ் கேஸ் (LAUGFS Gas) நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் உள்நாட்டு சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கொழும்பு மாவட்டத்தில் அதன் புதிய விலை 4,330 ரூபாவாக உயர்ந்துள்ளது.

அதேநேரம், 5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 120 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன் புதிய விலை 1,862 ரூபாவாக உயர்ந்துள்ளது.

உலகளாவிய புவிசார் அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் சர்வதேச எரிசக்தி சந்தைகளைப் பாதிக்கும் தொடர்ச்சியான மோதல்கள் காரணமாக விலை திருத்தம் அவசியமானது என்று நிறுவனம் கூறியது.

அதேநரேம், நாடு தழுவிய விநியோக வலையமைப்பு மூலம் தடையற்ற சேவையைப் பேணுவதோடு, இலங்கை முழுவதும் உள்ள வீடுகளுக்கு பாதுகாப்பான, நம்பகமான மற்றும் உயர்தர எரிவாயுவை தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதில் உறுதியாக இருப்பதாக லாஃப்ஸ் கேஸ் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக லிட்ரோ கேஸ் நிறுவனமும் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments