Sunday, March 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்யாழ் தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரம் – பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!

யாழ் தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரம் – பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராடி வருகின்ற நிலையில், அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

யாழ்.மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று அவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன.

இதன்போது ஒரு வழக்கு விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்கும் ஏனைய இரண்டு வழக்குகள் ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தனியார் காணி ஒன்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சட்டவிரோத விஹாரையை அகற்றக்கோரி போராடும் மக்களுக்கு எதிராக, பொலிசார் இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.

தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக குற்றம்சாட்டி, பிரதேசசபை தவிசாளர்கள், வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக பலாலி பொலிஸாரினால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தனித்தனியாக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments