Monday, March 9, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்'இப்படித்தான் எங்களை படுத்தப்போகிறீர்களா?' - மத்திய பட்ஜெட்டை விளாசும் ஜெரோதா நிதின் காமத்!

‘இப்படித்தான் எங்களை படுத்தப்போகிறீர்களா?’ – மத்திய பட்ஜெட்டை விளாசும் ஜெரோதா நிதின் காமத்!

மத்திய பட்ஜெட் 2026-ல் அறிவிக்கப்பட்ட பங்குகள் பரிவர்த்தனை வரி (STT) உயர்வு, பங்குச்சந்தையில் ஊக வணிகத்தைக் கட்டுப்படுத்தாது.

இது வர்த்தகர்களைப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கும் என்று ஜெரோதா (Zerodha) நிறுவனத்தின் இணை நிறுவனர் நிதின் காமத் எச்சரித்துள்ளார்.

எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கிய பட்ஜெட் அறிவிப்பு

பிப்ரவரி 1, ஞாயிற்றுக்கிழமை அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2026-ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், டெரிவேட்டிவ்ஸ் (Derivatives) சந்தையில் Securities Transaction Tax (STT) எனப்படும் பங்குகள் பரிவர்த்தனை வரி அதிரடியாக உயர்த்தப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியானவுடன் இந்திய பங்குச்சந்தையின் நிஃப்டி (Nifty) கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. பட்ஜெட் தினத்தன்று சந்தை சந்தித்த மிக மோசமான சரிவுகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இது குறித்து தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிதின் காமத், இந்த வரி உயர்வு சந்தையில் நிலவும் ஊக வணிகத்தைக் (Speculation) குறைக்கப் போவதில்லை என்று பகிரங்கமாகக் கூறியுள்ளார்.

ஆப்ஷன்ஸ் வர்த்தகம் மேலும் அதிகரிக்கும்: காமத் கவலை

பங்குச்சந்தை வர்த்தகத்தில் தற்போதே 95 சதவீத வர்த்தகம் Options பிரிவிலேயே நடப்பதாகக் குறிப்பிட்ட காமத், புதிய வரி உயர்வு இந்த நிலையை மேலும் தீவிரமாக்கும் என்று கூறியுள்ளார்.

அவர் முன்வைக்கும் முக்கிய வாதங்கள் இதோ:

  • Futures பாதிப்பு: புதிய STT உயர்வு ஆப்ஷன்ஸை விட ஃபியூச்சர்ஸ் (Futures) வர்த்தகத்தைத்தான் அதிகம் பாதிக்கும்.

  • தவறான இலக்கு: ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தை விட ஆப்ஷன்ஸ் வர்த்தகமே அதிக ஊகத்தன்மை (Speculative) கொண்டது.

ஆனால், புதிய வரி உயர்வு வர்த்தகர்களை ஃபியூச்சர்ஸில் இருந்து இன்னும் அதிகமான ஆப்ஷன்ஸ் வர்த்தகத்தை நோக்கியே தள்ளும்.

  • நிலைத்தன்மையற்ற சூழல்: அடிக்கடி வரி விகிதங்களை உயர்த்துவது தரகர்கள் (Brokers) மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் ஒருவித நிச்சயமற்ற நிலையை உருவாக்குகிறது.

இது நீண்ட கால அடிப்படையில் வர்த்தக அளவை (Trading Volume) பாதிக்கும்.

மத்திய அரசுக்கு நிதின் காமத் சொல்லும் தீர்வு

அரசு உண்மையாகவே ஊக வணிகத்தைக் குறைக்க விரும்பினால், வரியை உயர்த்துவதற்குப் பதிலாக ‘தயாரிப்புத் தகுதி’ (Product Suitability) முறையைக் கொண்டு வர வேண்டும் என்று நிதின் காமத் பரிந்துரைத்துள்ளார்.

“யாரெல்லாம் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யத் தகுதியானவர்கள் என்பதற்கான அளவுகோல்களை (Product Suitability Criteria) அரசு நிர்ணயிக்க வேண்டும். இது பலருக்கும் பிடிக்காத கருத்தாக இருக்கலாம், ஆனால் தரகர்கள் மற்றும் வர்த்தகர்களிடையே இருக்கும் குழப்பத்தை நீக்க இதுவே சிறந்த வழி. ‘ஆயிரம் STT உயர்வுகள் மூலம் மெல்லக் கொல்லும்’ (Death by a thousand STT hikes) முறையை விட இது மிகவும் சிறந்தது,” என அவர் பதிவிட்டுள்ளார்.

வரி உயர்வு விவரங்கள் (Budget 2026)

நிதியமைச்சர் அறிவித்த புதிய திட்டத்தின்படி:

  1. Futures: இதற்கான STT வரி 0.02%-லிருந்து 0.05%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது (சுமார் 150% உயர்வு).

  2. Options: ஆப்ஷன் பிரீமியங்களுக்கான வரி 0.1%-லிருந்து 0.15%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த வரி உயர்வு வரும் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரவுள்ளது. வர்த்தகச் செலவுகள் அதிகரிப்பது சில்லறை முதலீட்டாளர்களின் லாபத்தைப் பெருமளவு குறைக்கும் என்பதால் சந்தை வல்லுநர்கள் பலரும் காமத்தின் கருத்தை ஆமோதித்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments