இலங்கையில் ஊழலை ஒழிப்பதாக அரசியல் ரீதியாகப் பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட போதிலும், சர்வதேச ஊழல் தரவரிசையில் இலங்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.
சர்வதேச அறிக்கையின் அதிர்ச்சி முடிவுகள்
பிரித்தானியாவை தளமாகக் கொண்ட ‘வேர்ல்ட் எகனாமிக்ஸ்’ (World Economics) ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டிற்கான உலக ஊழல் உணர்வுக் குறியீட்டில் (Global Corruption Perception Index) இலங்கை 24.7 புள்ளிகளை மாத்திரமே பெற்றுள்ளது.
-
0 முதல் 100 வரையிலான அளவீட்டில் (0 என்பது அதிக ஊழல், 100 என்பது ஊழலற்ற நிலை), இலங்கை தற்போது “D” தர வரிசைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
-
2024-ஆம் ஆண்டில் 32 ஆக இருந்த இலங்கையின் புள்ளி, 2025-இல் 24.7 ஆகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியான வீழ்ச்சி: ஒரு பார்வை
கடந்த சில ஆண்டுகளில் இலங்கையின் ஊழல் உணர்வுக் குறியீடு புள்ளி விபரங்கள் பின்வருமாறு சரிவடைந்துள்ளன:
-
2021: 37 புள்ளிகள்
-
2022: 36 புள்ளிகள்
-
2023: 34 புள்ளிகள்
-
2024: 32 புள்ளிகள்
-
2025: 24.7 புள்ளிகள்
தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில்…
உலகளாவிய சராசரி ஊழல் புள்ளி 48.4 ஆக இருக்கும் நிலையில், இலங்கை அதற்குக் கீழே உள்ளது. அண்டை நாடான இந்தியா 32.5 புள்ளிகளுடன் இலங்கையை விடச் சிறந்த நிலையில் உள்ளது. எனினும், பாகிஸ்தான் (18.2) மற்றும் பங்களாதேஷ் (13) ஆகிய நாடுகள் இலங்கையை விட மோசமான நிலையில் உள்ளன. டென்மார்க் 100 புள்ளிகளுடன் ஊழலற்ற நாடாக முதலிடத்தில் உள்ளது.
முதலீட்டாளர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை
இந்தக் குறியீடானது சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களால் ஒரு நாட்டின் நிர்வாகத் திறனை மதிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. இலங்கையின் இந்தத் தொடர் வீழ்ச்சி, நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் வெளிநாட்டு முதலீடுகளைப் பாதிக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


