Wednesday, March 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்யாழில் மணல் அகழ்வுக்காக போலி அனுமதிப் பத்திரம் தயாரித்த குற்றச்சாட்டில் கைதானவருக்கு விளக்கமறியல்

யாழில் மணல் அகழ்வுக்காக போலி அனுமதிப் பத்திரம் தயாரித்த குற்றச்சாட்டில் கைதானவருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணத்தில் மணல் ஏற்றுவதற்காக போலி அனுமதிப் பத்திரத்தை தயாரித்த குற்றச்சாட்டில் கைதானவர் நீதிமன்ற உத்தரவின்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மணல் அகழ்வதற்கான அனுமதிப் பத்திரத்தை போலியாக தயாரித்து, அதன் மூலம் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நபரொருவர் தொடர்பில் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

அதனையடுத்து, கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து போலி அனுமதிப் பத்திரத்தை பொலிஸார் மீட்டிருந்தனர்.

கைதான நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் நேற்றைய தினம் புதன்கிழமை (8) சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை சந்தேக நபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments