Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்காரைநகர் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

காரைநகர் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

8 ம் திகதி புதன்கிழமை இரவு இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மீன்பிடி படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களை 23.01.2025 வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்று உத்தரவிட்டது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் நேற்றிரவு யாழ்ப்பாணம் – காரைநகர், கோவளம் கலங்கரை விளக்கத்தில் நடத்திய விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீன்பிடி படகை (01) கைப்பற்றியதுடன் 10 இந்திய மீனவர்களையும் கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக சட்டநடவடிக்கைக்காக யாழ். கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது அவர்கள் அனைவரையும் எதிர்வரும் 23.01.2025 வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதிவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments