வடமராட்சி நிருபர்
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை அவருடைய ஆதரவாளர்கள் யாழில் வெளிக்கொழுத்தி கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இன்று (09) கம்பஹா நீதிமன்றத்தில் அவர் முன்னிலைபடுத்தப்பட்ட போது, அவரை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
2019ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட குற்றவாளியான மாகந்துரே மதுஷின் விசாரணையின் போது, 2001ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பான விசாரணையில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
முன்னாள் அமைச்சர் டக்ளசின் விடுதலை வேண்டி நாட்டில் உள்ள சில ஆலயங்களில் சிறப்பு பூஜை இடம்பெற்றது.தற்போது டக்ளசின் விடுதலையை கட்சி ஆதரவாளர்கள் வெடிக்கொழுத்தி கொண்டாடி வருகின்றனர்



