பிலிப்பைன்ஸின், செபு பிராந்தியத்தின் மத்திய பகுதியில் குப்பை மேடு ஒன்று சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன், 38 பேர் காயமடைந்துள்ளனர்.
குப்பை மேடு சரிந்ததில் சிக்கிய 12 துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில், பாதிக்கப்பட்டவர்களில் பலர் துப்புரவு பணியாளர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மீட்புப்படையினரும், தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


