Thursday, March 19, 2026
spot_img
Homeஉலக செய்திகள்"மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்"-பாப்பரசர்

“மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்”-பாப்பரசர்

வெனிசுவேலா சுதந்திரமாக செயற்பட இடமளிக்க வேண்டும் என பாப்பரசர் 14 ஆம் லியோ வலியுறுத்தியுள்ளார்.

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவால் சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

“மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்” என்று பாப்பரசர் 14 ஆம் லியோ அழைப்பு விடுத்தார்.

வெனிசுவேலாவில் நடக்கும் நிகழ்வுகளை தான் “மிகுந்த கவலையுடன்” கவனித்து வருவதாகக் குறிப்பிட்ட பாப்பரசர், மற்ற அனைத்துக் காரணிகளையும் விட “வெனிசுவேலா மக்களின் நலனே முதன்மையாக இருக்க வேண்டும்” என்றும் கூறினார்.

பாப்பரசர் 14 ஆம் லியோ அமெரிக்காவில் பிறந்தவராக இருந்தாலும் அமெரிக்காவின் தீர்மானங்களை விமர்சிக்கும் அவரது கருத்துகளுக்கு பலரும் ஆதரவளித்து வருகின்றனர்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments