மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஹெரேரோ மாநிலத்தில் 6.5 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இந்நிலஅதிர்வு கெரேரோ மாநிலத்திலுள்ள சான் மார்கோஸ் (San Marcos) நகருக்கு அருகாமையிலும், பிரபலமான சுற்றுலாத் தலமான அகாபுல்கோவிற்கு (Acapulco) அருகிலும் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலஅதிர்வின் போது உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


