நமது நிருபர்
தேசிய மக்கள் சக்தியின் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கேவில்-நித்தியவெட்டை வீதி புனரமைப்பு பணிக்கான அடிக்கல் வைக்கும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் எம் பி தலைமையில் இன்று இடம்பெற்றது
எழுபது மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிட்டில் கேவில் -நித்தியவெட்டை 2Km வீதி காப்பெட் வீதியாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது.இதற்கான அடிக்கல்லை ரஜீவன் எம்.பி மற்றும் பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளர், பிரதேச சபை செயலாளர்,பிரதேசசபை உறுப்பினர்கள்,கிராம அலுவலர்,ஆகியோர் நாட்டிவைத்தனர்
கேவில் நித்தியவெட்டை மக்கள் நீண்டகாலமாக குறித்த வீதி புனரமைப்பு செய்யப்படாமையால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுவந்தனர்
இந்த திட்டத்தின் மூலம் கேவில் நித்தியவெட்டை வீதி முழுமையடைவதால் கேவில் நித்தியவெட்டை மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கிவந்த போக்குவரத்து பிரச்சனை தீர்க்கப்படுமென நம்பப்படுகின்றது
அடிக்கல் வைக்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் எம்பி,பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளர் யுகதீஸ், பிரதேசசபை செயலாளர்,கிராம அலுவலர்,பிரதேசசபை உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் கிராம மட்ட தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







