நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 11 இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படை வியாழக்கிழமை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


