நமது நிருபர்
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு ஏற்பாடு செய்த தமிழ் மற்றும் சிங்கள இளையோர்களுக்கு இடையில் மொழி மற்றும் கலாச்சார புரிதலை மேம்படுத்தும் வகையில் மொழி பாலம் நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (26) மாலை மாந்தை மேற்கில் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த நிகழ்வில் அருட்தந்தை செல்வநாயகம் பீரிஸ் அடிகளார்,மாந்தை மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் டிலக்ஸன்,கம்பாக மாவட்டத்தில் இருந்து வருகை தந்த மாவட்ட இணைப்பாளர் அசோக்க முனசிங்க,உள்ளடங்களாக கம்பாக மாவட்டத்தில் இருந்து அரச உத்தியோகத்தர்கள்,மாந்தை மேற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பாலையடி புதுக்குள இளையோர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் மற்றும் கம்பஹா மாவட்ட இளைஞர் யுவதி களிடையே மொழி பாலம் நட்புறவை மேம்படுத்தும் வகையில் குறித்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
நேற்று வெள்ளிக்கிழமை 26 ஆம் திகதி ஆரம்பமான நிகழ்வு தொடர்ச்சியாக எதிர்வரும் 29ம் திகதி திங்கட்கிழமை வரை இடம்பெற உள்ளது.
குறித்த நிகழ்வில் கம்பகாவில் இருந்து 20 இளைஞர் யுவதிகள் பங்கு பற்றி உள்ளனர். இதன் போது பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.





