யாழ் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா எம்.பி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கிடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெல்லிப்பழை வைத்தியசாலை பற்றி கருத்து தெரிவிக்கையில் அர்ச்சுனா குறுக்கிட்டார்.
இதனால் அவர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன்போது இவர் பெற்ற தாயாரையே பார்க்கவில்லை. அதற்கு இந்த அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருக்கின்ற வைத்தியர்களே சாட்சி.என கூறிக்கொண்டு இருக்கும் போதும் அர்ச்சுனா கருத்துக்களை கேட்க விடாது குழப்பிக்கொண்டு இருந்தார்
மேலும் கோபமடைந்த கஜேந்திரகுமார்,
“நான் கதைக்கும் போது நீ கதைக்காதே. குரங்கை கொண்டு வந்து பக்கத்தில் அமர்த்தி இருக்கிறார்கள்.
இவர் பக்கத்தில் இருப்பதால் எதுவும் கதைக்க முடியாமல் இருக்கிறது என கடுந்தொனியில் சாடியுள்ளார்.
அத்தோடு, வைத்தியர் சத்தியமூர்த்தி பேசும் போதும் அர்ச்சுனா இராமநாதன் குறுக்கிட்டார்.
அதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கும் மற்றும் அர்ச்சுனா இராமநாதனுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றிருந்தமை குறப்பிடத்தக்கது.


