கனடாவில் 20 வயதான இந்திய மாணவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கனடா – ஒட்டவா ஹைலேண்ட் கிரீக் டிரெயில் பகுதியில் உள்ள டொரோண்டோ ஸ்கார்பரோ பல்கலைக்கழகம் அருகே, கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணியளவில் மாணவர் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, அந்த மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த மாணவரின் பெயர் சிவாங்க் அவாஸ்தி (Shivank Awasthi) (வயது 20) என்பதும், இந்தியாவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
துப்பாக்கி சூடு நடத்திய நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய நிலையில், போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
உயிரிழந்த மாணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய மாணவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கனடாவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


