சீதுவை, வெலபட வீதியில் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த தந்தை இன்று திங்கட்கிழமை (06) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
73 வயதுடைய வயோதிபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
அதன்படி, சீதுவ, வெலபட வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சீதுவை, வெலபட வீதிக்கு காரில் சென்ற சந்தேக நபர்கள் சிலர் தந்தை மற்றும் இரு மகன்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த தந்தை மற்றும் இரு மகன்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒரு மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தந்தையும் இன்றைய தினம் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.