Saturday, March 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ரயிலுடன் மோதுண்டு ஒருவர் பலி!

ரயிலுடன் மோதுண்டு ஒருவர் பலி!

நமது நிருபர்

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

காங்கேசன்ந்துயிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ் தேவி ரயிலுடன் முகமாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வீதியை கடக்க முற்பட்டவேளை குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடவையின் ஊடாக வீதியை கடக்க முற்பட்டவர் ரயிலுடன் மோதுண்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் இவ்விபத்து இடம்பெற்ற வேளை ரயில் வீதி காவலாளி இப்பகுதியில் காணப்படவில்லை எனவும் இதுபோன்ற சம்பவங்கள் குறித்த பகுதியில் இரண்டு தடவைகள் இடம்பெற்று உள்ளதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இரத்தினராசா கிருஷ்ணமோகன் ஆணைப்பந்தி நல்லூர் யாழ்ப்பாணம் 52 வயதுடைய பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தரே பரிதாபகரமாக பலியாகினார் இச்சம்பவம் தொடர்பாக பளை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments