Thursday, March 12, 2026
spot_img
Homeஉலக செய்திகள்மொஸ்கோவில் சிற்றூந்து குண்டுவெடிப்பு

மொஸ்கோவில் சிற்றூந்து குண்டுவெடிப்பு

யுக்ரைன் நேட்டோ நாடுகள் இணைவதை எதிர்த்து கடந்த 2022 பெப்ரவரியில் ரஷ்யா தொடங்கிய போர் தீர்வு எடுக்கப்படாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்தநிலையில் ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் சிற்றூந்து குண்டுவெடிப்பில் ரஷ்யாவின் ஆயுதப் படைகளின் செயல்பாட்டுப் பயிற்சித் துறையின் லெப்டினன்ட் ஜெனரல் ஃபானில் சர்வரோவ் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு யுக்ரைன் உளவுத்துறையின் தொடர்பு இருக்கலாம் என்று ரஷ்ய அதிகாரிகள் சந்தேகிப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளில் ரஷ்யாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் இலக்கு வைக்கப்படும் தொடர்ச்சியான தாக்குதல் சம்பவங்களின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.

தற்போது ரஷ்யப் புலனாய்வுக் குழுவினர் இந்தச் சம்பவம் குறித்து தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments