Saturday, March 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இளைஞர் மீது பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம்

இளைஞர் மீது பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம்

திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் வைத்து 26 வயது இளைஞர் மீது பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் (19) ம் திகதி பிற்பகல் 5 மணியளவில் நடந்திருந்த போதும் இதுதொடர்பில் பொதுவெளியில் எந்த செய்திகளும் வெளிவந்திருக்காத நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞரின் உறவினர்கள்,நண்பர்களூடாக மனித உரிமை செயற்பாட்டாளர் திரு.தாமோதரம் பிரதீவன் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டதன் பின்னர் இச்சம்பவம் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதானது,

குறித்த இளைஞன் போதைப்பொருள் பாவனை உடையவர் எனவும், சூதாட்டத்தில் ஈடுபடுகிறவர் எனவும் தமக்கு தகவல் கிடைத்துச் சென்று அவரைக் கைது செய்ய முற்பட்ட போது கைகலப்பு ஏற்பட்டதாகவும் அந்த இடத்தில் தங்களுடைய துப்பாக்கி தவறுதலாக வெடித்ததாகவும் பொலிஸார் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments