பதுளை – பசறையிலிருந்து மடுல்சீமை ஊடாக பிட்டமாறுவ மற்றும் எக்கிரிய பகுதிகளுக்கு செல்லும் பிரதான வீதியில் குருவிகொல்ல 26 மைல் கல்லுக்கு அருகில் கற்பாறையும் மண்மேடும் சரிந்து வீழ்ந்துள்ளன.
இதனால், குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நேற்றிரவு முதல் பெய்த கடும் மழையின் காரணமாக மண்மேடு மற்றும் கற்பாறை சரிந்து வீழ்ந்ததாக குறிப்பிடப்படுகிறது


