Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்குடவத்தை மக்கள் முறைப்பாடு!

குடவத்தை மக்கள் முறைப்பாடு!

அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்த்தால் பாதிக்கப்பட்ட குடவத்தை மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

தாம் கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகம் எந்தவிதமான உதவிகளையும் செய்யவில்லை என்று குடவத்தை கிராம மக்களை இன்று (17) பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் முறையிட்டுள்ளனர்.

அண்மைய டித்வா புயல் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பல வீடுகள் உள்ளன என்றும்  இதுவரை எந்தவித உதவிகளும் யாரும் செய்யவில்லை என்றும் தமக்கான நிவாரணங்களை பெற்றுத்தருமாறும் பிரதேச மக்கள் கோரிய நிலையில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலரை உடனடியாக அழைத்த பாராளுமன்ற உறுப்பினர் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலரை பணித்துள்ளார்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments