ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க, மீண்டும் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச விளையாட்டு மத்தியஸ்த நீதிமன்றத்திலேயே அவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமது ஒப்பந்தக் காலம் முடிவடைவதற்கு முன்னரே ஒப்பந்தத்தை ரத்து செய்ததால் ஏற்பட்ட களங்கம் மற்றும் நிதி இழப்புக்கு நஷ்டஈடு கோரி, அவர் ஏற்கனவே அந்த நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.


