Monday, March 16, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மவுஸ்சாகலை நீர் மட்டம் உயர்வு

மவுஸ்சாகலை நீர் மட்டம் உயர்வு

நமது நிருபர்

 

இன்றைய காலை 8 மணி கணக்கீட்டின்படி மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் இன்னும் மூன்று அங்குலம் மட்டுமே நிறைய வேண்டிய நிலையில் உள்ளது.

அதேபோல் கென்யோன் லக்சபான பொல்பிட்டிய நவலக்சபான கலுகல காசல்ரீ விமலசுரேந்திர ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டிய நிலையில் உள்ளது.

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் மின் நிலையங்களில் தற்போது நீர் மின் உற்பத்தி அதிகரித்து உள்ளது.

எது எப்படியோ நீர் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

மீண்டும் தொடர் மழை பெய்யும் பட்சத்தில் மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் வான் கதவுகள் திறந்து விட வாய்ப்பு உள்ளது.

ஆகையால் மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் கரையோர பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மற்றும் களனி கங்கை கரையோர மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என லக்சபான நீர் மின் நிலைய அதிகாரி மற்றும் கென்யோன் நீர்தேக்கத்தின் கட்டளை அதிகாரி கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments