Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இரணைமடு அனைத்து வான் கதவுகளும் திறப்பு

இரணைமடு அனைத்து வான் கதவுகளும் திறப்பு

நமது நிருபர்

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளிளும் பலத்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதுடன் காற்றுடன் கூடிய அதிக மழை பெய்து வருவதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான குளமான இரணைமடு குளம் தற்பொழுது நீர்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக இன்று(28) காலை முதல் இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளது.

மற்றும் கனகாம்பிகை குலமும் தற்பொழுது வான் பாய்ந்த வண்ணம் உள்ளது கல்மடு குளம் தனது கொள்ளளவை எட்டி வான் பாய ஆரம்பித்துள்ளது.

எனவே இதனைக் கருத்தில் கொண்டு குளத்தின் நீரேந்தும் பகுதிகள் வாழும் மக்கள் மிகுந்த அவதாரத்துடன் செயல்படுமாறும் தமது பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ளுமாறும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments