கண்டி, அரநாயக்க – அம்பலாங்கந்தை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 120 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் 20 குழந்தைகளும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மண்சரிவு காரணமாக சிக்கியுள்ளவர்களை மீட்பதில் சிரமம் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
அதேவேளை, வெலிமடை, கெப்பட்டிபொல பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக வெலிமடை – நுவரெலியா வீதி தடைபட்டுள்ளது.
இந்நிலையில், இராணுவமும் பொலிஸாரும் தற்போது சடலங்களைத் தேடி வருவதாவும் இரண்டு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


